Mangayar Malar
July 2009


அறிவிப்புகள்
கருத்துகள்
உங்கள் பகுதி
சமையல்
அழகு
மருத்துவம்
ஆன்மிகம்
திருமண மலர்




Designed & hosted by

 

அப்பா, சில விநாடிகள் அமைதியாக இருந்தார். பிறகு நிமிர்ந்து அவளைப் பார்த்தபோது அவரின் விழிகள் துளிர்த் திருந்தன!

"நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். நான் பெத்த பொண்ணு நீ. உங்கிட்ட உண்மை பேசறதுக்கு நான் வெக்கப்பட வேண்டியதில்லைம்மா.

"நீ சொன்ன எல்லா நினைப்பும் வந் திச்சு. அக்காவையும், மாப்பிள்ளையையும், பேத்தியையும் தள்ளி வெச்சது அதிகப் படியான கோபமோன்னு தோணிச்சு. அவங்களையெல்லாம் ஒரு தடவை பாக்கணும்னு மனசு ஏங்குச்சி. ஆபரேஷன் முடிஞ்சி எல்லாம் சரியானதும் நீ சொன் னியே அதே மாதிரி மனசு கோபங்கற சட்டைய மறுபடி எடுத்துப் போட்டுக் கிச்சி.

"இதையெல்லாம் ஜெயிக்கிறதுக்கு நாம ஞானிகள் இல்லையேம்மா. சாதாரண மனுஷங்கதானே? வெளிப்படையாவே சொல்றேன். இப்ப எல்லாத்தையும் மன் னிக்கத் தயாரா இருக்கு என் மனசு."

மகிழ்ச்சியில் கண்கள் கலங்க அப்பா வின் கைகளைப் பிடித்துக் கொண்ட ஆர்த்தி, "ரொம்ப சந்தோஷமா இருக் குப்பா. அக்கா, மாமா ரெண்டு பேரும் இப்பரொம்ப நொந்து போயிருக்காங் கப்பா. இப்ப அவங்களுக்கு உறவுகளோட பாசமும், சப்போர்ட்டும் தேவைப்பா.

"நீங்க இப்பவும் வீம்பாவே பேசிடு வீங்களோன்னு நினைச்சேன். உங்களைப் பார்க்க முடியாம அக்கா எவ்வளவு பரி தவிச்சிப் போனாத் தெரியுமா? நான் அவங்களைக் கூட்டிட்டு வர்றேன்ப்பா. உங்க ஆசீர்வாதம் அவங்களுக்கு முதல்ல வேணும்" என்று கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள் ஆர்த்தி.

முழுமையாய் வாசித்து மகிழ சந்தா செலுத்தி
கல்கி / மங்கையர் மலர் வாங்குங்கள்.

 
No comments posted.

 

Kalki, Mangayar Malar, Gokulam Tamil, Gokulam English are trademarks of:
Bharathan Publications (P) Limited.
(C) 2009, Bharathan Publication (P) Limited.
All rights reserved.
  Bharathan Publications (P) Limited.
Kalki Buildings
47NP, Jawaharlal Nehru Road, Ekkaduthangal,
Chennai, India, Pin: 600 032.
Phone: 91-44-43438888 
Fax: 91-44-
2225 1021