Mangayar Malar
July 2009


அறிவிப்புகள்
கருத்துகள்
உங்கள் பகுதி
சமையல்
அழகு
மருத்துவம்
ஆன்மிகம்
திருமண மலர்




Designed & hosted by

 

நானும் சாயி பாபவை மேஜிக் சூப்பர் மேன் என்றுதான் நினைத் திருந்தேன். ஆனால், ஷீரடி பாபா மேல் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்தது. ஒரு சாயி அன்பர், "உனக்கு ஷீரடி பாபாவின் மேல் அபார நம்பிக்கை உள்ளதால், சாயிராம் உன்னிடம் வருவார்" என்று சொன்னார். அப்போதுகூட அலட்சியமாகச் சிரித்தேன்.

தில்லியில் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிப்புரிந்தபோது, ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்தவுடன் திடீரென்று தலைசுற்றி வாந்தி எடுத்தேன். அன்று, வயிறுக்குப் பட்டினிப் போட்டு விட்டு மறுநாள் சரியாகிவிடும் என்று நினைத்தேன். ஆனால், கை கால்களில் ஒரு நடுக்கம். நாலு அடி எடுத்து வைத்தால் பேலன்ஸ் போய் உட்கார வைத்தது.

ஒரு டாக்டரிடம் ஓடினேன். டெஸ்ட் ஸ்கேன் என்று எடுத்தோம் எல்லாம் நார்மல். மாதத்தில் ஐம்பத்து ஆறு கிலோவிலிருந்து ஐம்பது கிலோ எடை ஆகிவிட்டேன். பளிச்சென்று மூன்று வேளையும் ஆடை மாற்றும் நான், பித்துப் பிடித்தாற்போல், தலையும் வாராமல் உட்கார்ந்திருந்தேன். திடீரென்று அழுகை வரும். ஏதேதோ வைத்தியம் பார்த்து தில்லியில் ஒன்றும் சரியாக வில்லை என்று சென்னைக்கு வந்தேன்.

அனுமான் தாசர் ஒருவர், என் னைப் பார்த்து ஏதோ கழிப்பை மிதித்துவிட்டதாகவும், அதனால் செய்த மந்திரங்களினால் பாதிக் கப்பட்டிருப்பதாகவும், உடனடி யாகப் பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்றும் சொன்னார். எலுமிச்சம் பழங்களை வெட்டி, குங்குமம் தடவி, சுடுகாடு பக்கம் போடச் சொன்னார். மந்திரித்த விபூதியை அளித்தார். அதை இரவு தடவிக் கொண்ட வுடனேயே உடம்பு தணலில் போட்டது போல் எரியத் தொடங் கியது. பின் திரும்ப தில்லி வந்தேன்.

சீரடி சாயி பாபா முன் அமர்ந்து கதறினேன். மூன்று மாதங் கள் லீவு எடுத்தாயிற்று. பள்ளி நிர்வாகத்தினர்,

எனக்கு வயது ஐம்பத்து மூன்று. பத்து வருடங்களுக்கு முன்பு எனது ஃபிளாட்டை விற்க வேண்டிய சூழ்நிலை, நாளிதழில் விளம்பரம் கொடுத்தேன். எனக்குத் தெரிந்த நண்பர்களிடமும் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் எதுவுமே பயனளிக்கவில்லை.

ஒரு நாள், எனக்கு அறிமுகமில்லாத ஒரு தம்பதி, என்னைத் தேடி வந்தனர். அவர்கள் பகவான் ஷ்ரீசத்ய சாயியின் பக்தர்கள். கருணையே உருவான பகவான், அந்தத் தம்பதியரிடம் எனது வீட்டின் விலாசம் அடையாளம், எல்லாவற்றையும் சொல்லி, அதை விலைக்கு வாங்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். அவர்களும் வந்து நான் சொன்ன விலைக்கு, மறுப்பேதும் சொல்லாமல் முன் பணம் கொடுத்துவிட்டனர்.

பகவான் ஷ்ரீசத்ய சாயி பாபாவின் கருணை மழை என் மேல் பொழிந்து கொண்டிருப்பதை அன்று நான் உணரவில்லை.

அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக. அவர் என் குடும்பத்தில் நிகழ்த்திய அற்புதங்களின் மூலம் எங்கள் மனத்தில் நுழைந்துவிட்டார். அதை எழுத்தால் எழுதினால் மட்டும் போதாது. நிர்மலமான மனதுடன் உணர்ந்தால்தான், அருமையும் பெருமையும் புரியும்.

- என்.ஆர்.சரஸ்வதி, சென்னை

என் கணவருக்கு, மலேஷியாவில் வேலை கிடைத்து அங்கே இருக் கிறோம். இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள், நான் ஷாப்பிங் போயிருந்தேன்.

ஒரு திருடன், சட்டென்று என் கைப்பையைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டான். அதற்குள் சில நகை களும், என் பாஸ்போர்ட்டும் இருந்தன. நான் அப்படியே `ஓ' என்று அழுது கொண்டு உட்கார்ந்துவிட்டேன். மன மெல்லாம் `சாய்ராம்.. சாய்ராம்' என்று பதறியபடி இருந்தது.

உடனே, கடவுள்மீது பாரத்தைப் போட்டுவிட்டு, இந்தியத் தூதரகம், பாஸ்போர்ட் அலுவலகம் எல்லா வற்றுக்கும் நேரில் போய் புகார் கொடுத்துவிட்டு வந்தோம்.

மூன்று நாட்கள், மூன்று யுகங் களாகக் கழிந்தன. பாபாவிடம் அழுது தொழுதபடி இருந் தேன். நான்காவது நாள், வெள்ளைக் காரர் ஒருவர் என் னைத் தொடர்பு கொண்டார்.

"மாலதி விஜயன் என்கிற பெயர் கொண்ட பாஸ்போர்ட் என்னிடத்தில் உள்ளது. வந்து வாங்கிக் கொள்ளுங்கள்" என் றார். எனக்குப் போன உயிர் திரும்ப வந்தது. பாபாவுக்கு நன்றி சொல்லி விட்டு, அவர் இருந்த இடத்துக்குப் போனோம்.

"நான், இன்று என்னுடைய வளர்ப்பு நாயுடன் வாக்கிங் போனேன். ஒரு குறிப்பிட்ட இடம் வந்தபோது, என்னுடைய நாய் பயங்கரமாகக் குரைத்தபடியே, சுற்றிச்சுற்றி வரத் தொடங்கியது. அந்த இடத்தில் பாபா வின் சின்னஞ்சிறு படம் தென்பட்டது. நான் ஏற்கெனவே அவரை அறிந்திருந் தேன் என்பதால், ஆவலுடன் கையிலெ டுத்துப் பார்த்தபோது, அதனுடன் ஒட்டியபடி, மண்ணில் மறைந்திருந்த பாஸ்போர்ட்டும் வெளிவந்தது!" என்றபடி என்னுடைய பாஸ் போர்ட்டை ஒப்படைத்தார்.

நகை, பணத்தை எடுத்துக் கொண்ட திருடன், பாஸ்போர்ட்டைத் தூக்கி வீசியிருக்கிறான். இலேசான மழை பெய்து, மண் மூடியதால் பாஸ்போர்ட் பறந்து போகாமல் இருந்திருக்கிறது. ஷ்ரீபாபாவின் படம் அதை நனையாமல் காப்பாற்றியுள்ளது என்பதை அறிந்த நாங்கள் பரவசமாக நின்றோம்.

- மாலதி விஜயன்,
சென்னை

முழுமையாய் வாசித்து மகிழ சந்தா செலுத்தி
கல்கி / மங்கையர் மலர் வாங்குங்கள்.

 
No comments posted.

 

Kalki, Mangayar Malar, Gokulam Tamil, Gokulam English are trademarks of:
Bharathan Publications (P) Limited.
(C) 2009, Bharathan Publication (P) Limited.
All rights reserved.
  Bharathan Publications (P) Limited.
Kalki Buildings
47NP, Jawaharlal Nehru Road, Ekkaduthangal,
Chennai, India, Pin: 600 032.
Phone: 91-44-43438888 
Fax: 91-44-
2225 1021